மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
போடி அருகே மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார்
மதுரை கான்பாளையத்தை சேர்ந்த அமிர்தராஜ் மனைவி பத்மபிரியா (வயது 44). இவரது மகள்கள் ஜீவ ஆதித்யா (18), பத்மினி (17). பத்மபிரியா தனது மகள்களுடன் போடியில் உள்ள உறவினர் வீட்டு விேஷசத்திற்கு வந்தார். கடந்த 1-ந்தேதி இவர்கள் 3 பேரும் மோட்டார்சைக்கிளில் குரங்கணி சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை பத்மபிரியா ஓட்டினார். போடியை அடுத்த குரங்கணி மலைப்பாதையில் சென்றபோது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது மோட்டார்சைக்கிளில் இருந்து 3 பேரும் தவறி விழுந்தனர். இதில் படுகாயமடைந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பத்மபிரியா நேற்று பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.