மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு
மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் இறந்தாா்.
பெருந்துறை
கவுந்தப்பாடியை அடுத்த பாண்டியம்பாளையம் தன்னாசிப்பட்டியை சேர்ந்தவர் வரதன். இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 52). சம்பவத்தன்று இவர் தன்னுடைய மகன் கண்ணன் என்பவருடன் மோட்டார்சைக்கிளில் பெருந்துறைக்கு வந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு மீண்டும் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். பெருந்துறை பவானி ரோடு வாவிக்கடை அருகே சென்றபோது ஈஸ்வரி தனக்கு மயக்கமாக வருகிறது என மகன் கண்ணனிடம் கூறி உள்ளார். இதனால் மோட்டார்சைக்கிளை கண்ணன் சாலையோரம் நிறுத்தி உள்ளார். அப்போது மோட்டார்சைக்கிளில் உட்கார்ந்திருந்த ஈஸ்வரி எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன், கண்ணன் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூாி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி ஈஸ்வரி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.