பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு


பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைப்பு
x

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

ஈரோடு

பவானிசாகர்

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அணையாக பவானிசாகர் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வாய்க்காலில் திறந்துவிடப்பட்டது.

இந்த நிலையில் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறப்பது நேற்று குறைக்கப்பட்டது. அதன்படி காலை 8 மணிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு மாலை 4 மணி அளவில் வினாடிக்கு 1,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 81.58 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 462 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 1,050 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.


Next Story