மதுரையில் இருந்து தேனிக்கு ரெயிலில் தேசியகொடி கட்டி பயணம் செய்த இளைஞர்கள்


மதுரையில் இருந்து தேனிக்கு  ரெயிலில் தேசியகொடி கட்டி பயணம் செய்த இளைஞர்கள்
x

மதுரையில் இருந்து தேனிக்கு வந்த ரெயிலில் தேசிய கொடி கட்டி இளைஞர்கள் பயணம் செய்தனர்

தேனி

75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி நாடு முழுவதும் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் தேசியகொடி ஏற்றி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தை சேர்ந்த விழுதுகள் இளைஞர் மன்றத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் மதுரை-தேனி பயணிகள் ரெயிலில் தேசியகொடி கட்டியதோடு, பயணிகளுக்கு தேசியகொடி மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதற்காக இந்த தன்னார்வலர்கள் தேனியில் இருந்து மதுரைக்கு காரில் சென்று, அங்கிருந்து ரெயிலில் தேசியகொடி கட்டியும், கையில் தேசிய கொடிகளை சுமந்துகொண்டும் தேனிக்கு வந்தனர். வரும் வழியில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி மற்றும் தேனி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு மற்றும் தேசியகொடி வழங்கினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்ற செயலாளர் சங்கிலித்துரை மற்றும் தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


Next Story