முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு


முல்லைப்பெரியாறு அணையில் இருந்து   கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
x

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது

தேனி

தமிழக-கேரள மாநில எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. தேனி, திண்டுக்கல் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீர் ஆதாரமாக இந்த அணை திகழ்கிறது. 152 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 142 அடி வரை நீரை தேக்கிக்கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. பருவ காலத்துக்கு ஏற்ப நீர்மட்ட உயர்வை நிர்ணயிக்கும் ரூல்கர்வ் விதிப்படி நேற்று முன்தினம் வரை அணையில் 137.5 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்றுஅட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று அணையின் நீர்மட்டம் 138.90 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 6,957 கனஅடியாகவும் இருந்தது. தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,194 கனஅடி, கேரள பகுதிக்கு வினாடிக்கு 5986 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைய தொடங்கி உள்ளது.

இதனால் அணைக்கு நீர்வரத்து குறைந்து நீர்மட்டமும் குறைய ெதாடங்கியது. அதன்படி இன்று அணையின் நீர்மட்டம் 138.50 அடியாக குறைந்தது. நீர்வரத்து வினாடிக்கு 5,073 கனஅடியாகவும், தமிழக பகுதிக்கு வினாடிக்கு 2,194 கனஅடி, கேரள பகுதிக்கு 2,879 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.


Next Story