பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும்
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும்
பட்டுக்கோட்டையில் இருந்து புதுக்கோட்டைக்கு மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ் நிறுத்தம்
திருச்சிற்றம்பலம் அருகே உள்ள புனல்வாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று பட்டுக்கோட்டையில் இருந்து புனல்வாசல் கிராமம் வழியாக புதுக்கோட்டைக்கு அரசு பஸ் தினமும் இயக்கப்பட்டு வந்தது. இதனால் புனல்வாசல் மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர்.
தற்போது அந்த பஸ் புனல்வாசல் கிராமத்தின் வழியாக செல்லாமல் துறவிக்காடு திருச்சிற்றம்பலம் ஆவணம் கைகாட்டி வழியாக தினமும் புதுக்கோட்டைக்கு இயக்கப்படுகிறது.
மீண்டும் இயக்க வேண்டும்
எனவே பொதுமக்கள் நலன் கருதி பட்டுக்கோட்டையில் இருந்து துறவிக்காடு, திருச்சிற்றம்பலம் ஆவணம், கைகட்டி வழியாக புதுக்கோட்டை வரை இயக்கப்படும் அரசு பஸ்சினை மீண்டும் புனல் வாசல் கிராமம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு புனல்வாசல் முன்னோடி தென்னை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் மரியம் மைக்கேல் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.