ராஜஸ்தானில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் கம்பு வந்தது


ராஜஸ்தானில் இருந்து நாமக்கல்லுக்கு சரக்கு ரெயிலில் 2,600 டன் கம்பு வந்தது
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு தேவையான தீவனம் மூலப் பொருட்கள் பெரும்பாலும் வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரெயிலில் கொண்டு வரப்படுவது வழக்கம். அதன்படி ராஜஸ்தானில் இருந்து நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு நேற்று 2,600 டன் கம்பு மூட்டைகள் சரக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. 41 வேகன்களில் வந்திருந்த கம்பு மூட்டைகள் அனைத்தும், 90 லாரிகளில் ஏற்றப்பட்டு நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story