கோபி நகராட்சி கூட்டத்தில் இருந்துஅ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு


கோபி நகராட்சி கூட்டத்தில் இருந்துஅ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

ஈரோடு

கடத்தூர்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்காததை கண்டித்து கோபி நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

நகராட்சி கூட்டம்

கோபி நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் என்.ஆர். நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் பிரேம் ஆனந்த், என்ஜினீயர் சிவகுமார் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் முன்னிலை வகித்தனர். 25 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

அதன்பின்னர் தி.மு.க, அ.தி.மு.க கவுன்சிலர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.

கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது அ.தி.மு.க. கவுன்சிலர்கள், எங்கள் ஆட்சி காலத்தில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2500 மற்றும் கரும்பு, முந்திரி, வெள்ளம், திராட்சை உள்ளிட்ட பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினோம்.

வெளிநடப்பு

இந்தநிலையில் தற்போது ஆளும் தி.மு.க. அரசு பொங்கல் பரிசு தொகுப்பை அறிவிக்கவில்லை. மேலும் ஆயிரம் ரூபாய் மட்டும் தருவதாக கூறியுள்ளார்கள்.

எனவே கூடுதலாக ரூபாயும், பரிசு தொகுப்பையும் வழங்கவேண்டும் என்று கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்கள்.

மேலும் நகராட்சி அலுவலகத்தின் முன்பாக நின்று கோரிக்கைகள் குறித்து கோஷமும் எழுப்பினார்கள்.


Next Story