தக்கலை அருகேவீட்டு சுற்றுச்சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
தக்கலை அருகேவீட்டு சுற்றுச்சுவரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி ,இறந்தார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள திருவிதாங்கோடு, வேளாண் விளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). இவர் சென்னையில் உள்ள மர பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்தார். ஈஸ்டர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த அவர் நேற்று முன்தினம் அடப்பு விளையில் வசிக்கும் உறவினர் சீமோன் ராஜ் வீட்டுக்கு சென்றார். இரவு 11.30 மணியளவில் வீட்டின் சுற்றுச்சுவரில் உட்கார்ந்து இருந்தார். அதன் அருகில் 30 அடி பள்ளம் உள்ளது. வீட்டின் சுற்றுச்சுவரில் இருந்து செல்வராஜ் திடீரென்று தவறி விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி அவருடைய மகன் டென்னிஸ் தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட வந்த போது தொழிலாளி செல்வராஜ் இறந்தது அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. செல்வராஜூக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மகளுக்கு திருமணமாகிவிட்டது.