அனல் மின்நிைலயங்களில் இருந்து உலர்சாம்பல் கழிவில் 20 சதவீதத்தை இலவசமாக வழங்க கோரிக்கை


அனல் மின்நிைலயங்களில் இருந்து  உலர்சாம்பல் கழிவில் 20 சதவீதத்தை இலவசமாக வழங்க கோரிக்கை
x
தினத்தந்தி 13 Dec 2022 12:15 AM IST (Updated: 13 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அனைத்து அனல் மின்நிலையங்களில் இருந்தும் உலர்சாம்பல் கழிவில் 20 சதவீதத்தை உலர்சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்ைக மனு கொடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

அனைத்து அனல் மின்நிலையங்களில் இருந்தும் உலர்சாம்பல் கழிவில் 20 சதவீதத்தை உலர்சாம்பல் செங்கல் தயாரிப்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்ைக மனு கொடுக்கப்பட்டுள்ளது.

உலர்சாம்பல் கழிவு

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில்,

தமிழ்நாடு உலர் சாம்பல் செங்கல் மற்றும் பிளாக்ஸ் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

அனைத்து அனல்மின் நிலையங்களிலும் வெளியாகும் உலர் சாம்பல் கழிவில் 20 சதவீதத்தை உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மத்திய மின்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தினமும் 3 ஆயிரத்து 500 டன் நிலக்கரி உலர் சாம்பல் கழிவு வெளியேறுகிறது. இதில் 20 சதவீதம் அதாவது 700 டன் சாம்பல் கழிவு, உலர் சாம்பல் செங்கல் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

தொழிலாளர்கள் பாதிப்பு

இந்த ஒதுக்கீட்டு ஆணை 31.3.2022-க்கு பிறகு புதுப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக கடந்த 9 மாதங்களாக 107 உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உலர் சாம்பல் வழங்கப்படவில்லை. இதனால் உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உலர் சாம்பல் செங்கல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு 20 சதவீத உலர் சாம்பலை தூத்துக்குடி அனல்மின் நிலையம் தொடர்ந்து இலவசமாக வழங்கிடும் வகையில், ஒதுக்கீட்டு ஆணையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.


Next Story