நாளை முதல் 12-ந் தேதி வரைசிறப்பு தடுப்பூசி முகாம்கள்


நாளை முதல் 12-ந் தேதி வரைசிறப்பு தடுப்பூசி முகாம்கள்
x
தினத்தந்தி 6 Aug 2023 12:15 AM IST (Updated: 6 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் 12-ந் தேதி வரை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் 12-ந் தேதி வரை சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளது.

தடுப்பூசி முகாம்கள்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- இந்தியா முழுவதும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு கர்ப்பகாலத்தில் வழங்கப்படும் தடுப்பூசி சேவைகளை மேம்படுத்தவும். கோவிட் தொற்று காலத்தில் தடுப்பூசி விடுப்பட்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி சேவைகளை கண்டறிந்து விடுதலின்றி தடுப்பூசி சேவையினை வழங்கவும்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் முழுமையாக இலக்கீட்டினை அடையப்பெற்றுள்ளதை கணக்கெடுப்பு செய்தும், கர்ப்பிணிகளுக்கும் 5 வயது வரை குழந்தைகளுக்கு தடுப்பூசி சேவைகள் ஏதும் விடுபட்டுள்ளனவா எனவும் கணக்கெடுப்பு செய்தும், மிஷன் இந்திர தனுஷ் 5.0 என்ற சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட உள்ளது.

நாளை முதல்

இந்த சிறப்பு முகாம்கள் நாளை(திங்கட்கிழமை) முதல் 12-ந் தேதி வரையிலும், 2-வது சுற்று செப்டம்பர் 11-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும், 3-வது சுற்று அக்டோபர் 9 முதல் 14-ந் தேதி வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளில் துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் கிராம சுகாதார செவிலியர் மற்றும் நடமாடும் மருத்துவ குழுக்கள் மூலம் தடுப்பூசிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் இந்த தடுப்பூசி முகாம்களை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு முழுமையான தடுப்பூசி சேவைகளை பெற்றுக்கொள்ளவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story