தூத்துக்குடியில் இருந்துஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் விவரம


தூத்துக்குடியில் இருந்துஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் விவரம
x
தினத்தந்தி 4 Aug 2023 6:45 PM GMT (Updated: 4 Aug 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் விவரம தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி தூத்துக்குடி-மும்பை சிறப்புரெயில் (01144) அதிகாலை 4 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருத்தணி வழியாக இயக்கப்படுகிறது.

மாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி-மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும், இரவு 8.20 மணிக்கு தூத்துக்குடி-சென்னை முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயிலும், இரவு 9.45 மணிக்கு தூத்துக்குடி-தாம்பரம் சிறப்பு ரெயிலும் (06002), இரவு 10.35 மணிக்கு தூத்துக்குடி-ஓகா எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த ரெயில் சேவையை தூத்துக்குடி மாநகர பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலாளர் பிரம்மநாயகம் தெரிவித்து உள்ளார்.


Next Story