வாகனங்களில் இருந்து 11 பேட்டரிகள் திருடிய வாலிபர் கைது


வாகனங்களில் இருந்து  11 பேட்டரிகள் திருடிய வாலிபர் கைது
x

வாகனங்களில் இருந்து 11 பேட்டரிகள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

ஈரோடு

பவானி

பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டிராக்டர்கள், பள்ளி வாகனம், கார் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்ட பேட்டரிகள் மர்மமான முறையில் திருட்டு போயின.

இதுகுறித்த புகார்களின் பேரில் பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பவானி பழைய பஸ்நிலையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் நிறுத்தி, சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர்.

அப்போது காருக்குள் 11 பேட்டரிகள் இருந்தன. இதனால் போலீசார் காரில் வந்த வாலிபரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில் அவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள பொன்னம்பட்டியான்காடு பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 27) என்பதும், அவர்தான் வாகனங்களில் இருந்து பேட்டரி திருடியவர் என்பதும் தெரிந்தது.

இதையடுத்து போலீசார் சூர்யாவை கைது செய்து, அவரிடம் இருந்த பேட்டரிகளையும் பறிமுதல் செய்தனர்.


Related Tags :
Next Story