மானிய விலையில் விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்பு


மானிய விலையில் விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்பு
x
தினத்தந்தி 16 Oct 2023 12:30 AM IST (Updated: 16 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டையில் மானிய விலையில் விவசாயிகளுக்கு பழச்செடி தொகுப்பு வழங்கப்பட்டது.

கோயம்புத்தூர்


சுல்தான்பேட்டை வட்டாரம் தோட்டக்கலைத்துறை சார்பில், பொதுமக்களுக்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 935 பழச்செடி தொகுப்புகள் 75 சதவீத மானியத்தில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மா, கொய்யா, எலுமிச்சை, பப்பாளி, நெல்லி என 5 கன்றுகள் அடங்கிய ஒரு பழச்செடி தொகுப்பின் மொத்த விலை ரூ.200 ஆகும். இதில், 75 சதவீதம் மானியம் ரூ.150 கழித்தது போக பயனாளிகள் ரூ.50 செலுத்தினால் போதும். நேற்று வடவள்ளி கிராமத்தில் பழச் செடி தொகுப்புகள் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ், உதவி அலுவலர் தியாகு, கிராம நிர்வாக அலுவலர் உதயராணி ஆகியோர் கலந்து கொண்டு பழச்செடிகளை பயனாளிகளுக்கு வழங்கினர். இதேபோல், வட்டாரத்தில் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு தொகுப்புகள் வழங்கப்படுகிறது.


Next Story