வால்பாைறயில் காபி செடிகளில் காய்கள் காய்க்கத் ெதாடங்கியது-மகசூல் அதிகாிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி


வால்பாைறயில் காபி செடிகளில் காய்கள் காய்க்கத் ெதாடங்கியது-மகசூல் அதிகாிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 13 Aug 2023 7:00 PM GMT (Updated: 13 Aug 2023 7:00 PM GMT)

வால்பாைறயில் காபி செடிகளில் காய்கள் காய்க்கத் ெதாடங்கியது. மேலும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாைறயில் காபி செடிகளில் காய்கள் காய்க்கத் ெதாடங்கியது. மேலும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

பணப் பயிர்கள்

வால்பாறை பகுதியில் காபி, தேயிலை, மிளகு, பன்னீர் மற்றும் ஏலக்காய் ஆகிய பணப் பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு காபி செடிகளில் அதிகளவிலான காபி காய்கள் காய்க்கத் தொடங்கியது. ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் காபி செடிகளில் காபி பூக்கள் பூக்கத் தொடங்கும். மே மாதம் இறுதி வாரத்தில் இருந்து தென் மேற்கு பருவமழை பலத்த காற்றுடன் பெய்யத் தொடங்கி விடும். இதில் காபி பூக்கள் சேதமடைந்து காபி காய்கள் காய்ப்பதில் சிரமம் ஏற்படும்.

ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இதனால் கோடை காலத்திலும் காபி செடிகளுக்கு தேவையான தண்ணீர் அதிகளவில் கிடைத்தது.

கொத்து கொத்தாக காய்த்தன

இதன்காரணமாக காபி செடிகளில் பூத்திருந்த காபி பூக்கள் நன்கு பூத்து தற்போது காபி காய்களாக மாறிவிட்டது. அனைத்து காபி தோட்டங்களில் இருக்கும் காபி செடிகளில் காய்கள் நன்றாக கொத்துக் கொத்தாக பிடித்து காய்த்து உள்ளது.

இந்த காபி காய்கள் வருகிற டிசம்பர் இறுதி வாரத்தில் இருந்து மார்ச் மாதம் இறுதிக்குள் நல்ல தரமான காபி பழங்களாக மாறிவிடும். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் இருந்து காபி பழங்கள் பறிக்கும் பணி தொடங்கும்.

இந்த ஆண்டு வெயில் காலத்தில் மழை பெய்து காபி செடிகளில் காய்கள் காய்க்கத் தொடங்கியதால் காபி பழ மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக காபி விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.


Next Story