பண்ணாரிமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை


பண்ணாரிமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

துடியலூர் அருகே பண்ணாரிமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவையை அடுத்த துடியலூர் அருகே வெள்ளக்கிணறு உரு மாண்டம்பாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கோமாதா பூஜை, பவுர்ணமி பூஜை, மாங்கல்ய பூஜை, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது பண்ணாரி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

விழாவில் சிறுமிகள் கலந்து கொண்டு 13 வகை பொருட்களுடன் சிறப்பு பூஜைகள் செய்தனர். மாங்கல்ய பூஜையை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட தம்பதிகளை அமர வைத்து காலில் விழுந்து பெண்கள் ஆசிர்வாதம் பெற்றனர்.

பவுர்ணமி பூஜை முன்னிட்டு சந்திர பகவானை வழிபட்ட பெண்கள் சாமியின் முன்பு நிலா தெரியும்படி வைக்கப்பட்டிருந்த நிலை கண்ணாடிக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.

நிலவு பூஜையில் பெண்கள் அதிகமாக கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாகி தேவேந்திரன் மற்றும் பவுர்ணமி குழுவினர் செய்திருந்தனர்.


Next Story