முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
முத்துமாரியம்மன் கோவிலில் பவுர்ணமி சிறப்பு பூஜை
நாகப்பட்டினம்
திட்டச்சேரி வெள்ளத்திடல் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பவுர்ணமியையொட்டி முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு மஞ்சள்பொடி, மாப்பொடி, தேன், திரவியபொடி, பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story