வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி


வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
x

வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல்

வடமதுரையில் பிரசித்திபெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி, வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாலாலய பூஜையுடன் திருப்பணி தொடங்கியது. கோவில் திருப்பணிகள் முடிந்ததை தொடர்ந்து அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி கும்பாபிஷேகம் நடத்த அரசு அனுமதி அளித்தது.

இந்தநிலையில் கோவிலில் கும்பாபிஷேக முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அப்போது திருக்கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து யாகசாலை அமைக்கப்படும் இடத்தில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் கற்பக வெண்ணிலா, திருப்பணி பொறுப்பாளர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story