மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரருக்கு நிதி உதவி


மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரருக்கு நிதி உதவி
x

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரருக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

சாயல்குடி,

சாயல்குடி அருகே கீழச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத் பாபு. இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்தநிலையில் பாகிஸ்தானில் நடைபெற உள்ள சக்கர நாற்காலி ஆசிய கோப்பை கிரிக்கெட் 20-20 போட்டிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்திய அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு டிசம்பர் மாதம் 21-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை நடக்கும் போட்டியில் விளையாட உள்ளார். பாகிஸ்தான் கராச்சியில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சக்கர நாற்காலி போட்டியில் இந்தியா, வங்காளதேசம், நேபாளம், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தநிலையில் அங்கு செல்வதற்கு போதிய வசதி இல்லாததால் நிதி உதவி கேட்டு மாவட்ட கலெக்டர், அமைச்சர் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. அதேபோல் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா சக்கர நாற்காலி மற்றும் நிதி உதவியை வினோத் பாபுவிற்கு வழங்கினார்.

1 More update

Next Story