மாதந்தோறும் சம்பளத்தில் கமிஷன் தராததால் ஆத்திரத்தில்பெண் தூய்மை பணியாளருக்கு மிரட்டல்: அ.தி.மு.க.கவுன்சிலர் மீது வழக்கு பதிவு


தினத்தந்தி 14 Sept 2023 12:15 AM IST (Updated: 14 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாசரேத்தில் மாதந்தோறும் சம்பளத்தில் கமிஷன் தராததால் ஆத்திரத்தில் பெண் தூய்மை பணியாளருக்கு மிரட்டல் விடுத்த அ.தி.மு.க.கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத்தில் சம்பளத்தில் கமிஷன் தரமறுத்த பேரூராட்சி பெண் ஒப்பந்த தூய்மை பணியாளரை அவதூறாக பேசி மிரட்டிய அ.தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெண் தூய்மை பணியாளர்

நாசரேத் பேரூராட்சி திருவள்ளுவர் காலணியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சத்தியா (வயது 40). இவர் நகர பஞ்சாயத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் பெண் தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளத்தில் கமிஷன் தரவேண்டும் என அ.தி.மு.க.வை ேசர்ந்த பேரூராட்சி கவுன்சிலர் ரவீந்திரன், சத்தியாவிடம் கேட்டாராம். அதனை அவர் தர மறுத்ததால் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.

தொடர் மிரட்டல்

இதனை தொடர்ந்து ரவீந்திரன் அடிக்கடி சத்தியா ெசல்லும் ெமாபட் மீது தனது மோட்டார் சைக்கிளை மோதுவதுபோல ஓட்டிச்சென்று மிரட்டியும் வந்துள்ளார். மேலும் சத்தியாவின் நடத்தை குறித்தும், அவரை இழிவுபடுத்தியும், அவதூறாகவும் ரவீந்திரன் பேசி மிரட்டி வந்தாராம். இது குறித்து சத்தியா நாசரேத் போலீசாரிடம் புகார் செய்தார். இதன்பேரில் ரவீந்திரன் மீது நாசரேத் சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நாசரேத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story