செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்: தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்


செலவுக்கு பணம் தராததால் ஆத்திரம்: தந்தையின் கழுத்தை அறுத்துக் கொன்ற மகன்
x

சாத்தான்குளத்தில் கோவிலில் தூங்கிய தொழிலாளியை கழுத்தை அறுத்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வீரகுமாரபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 58). இவரது மகன் வேதநாயக துரை (35). இவருக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் கோவையில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், இரவில் வழக்கம் போல் தான் தூங்கும் கோவிலில் செல்லத்துரை தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபா் திடீரென்று கத்தியால் செல்லையாவின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் செல்லையா கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் செல்லையாவை அவரது மகனே கொலை செய்தது தெரியவந்தது. அதாவது, செல்லையாவுக்கு சமீபத்தில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பார்ப்பதற்காக மகன் வேதநாயக துரை வந்தார். அப்போது, அவர் தனது தந்தை செல்லையாவிடம் செலவுக்கு பணம் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வேதநாயகதுரை நேற்று முன்தினம் இரவில் கோவிலில் தூங்கிக் கொண்டு இருந்த செல்லையாவின் கழுத்தை கத்தியால் அறுத்துக்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேதநாயக துரையை கைது செய்தனர்.


Next Story