காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் - ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்


காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் - ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தல்
x

காய்ச்சல் அறிகுறி இருந்தால் வீட்டிலேயே மருத்துவம் பார்க்காமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தினார்.

சென்னை,

சென்னை ஆவடியில் ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனை கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கு சுகாதாரத்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நேரில் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் வீட்டிலேயே மருத்துவம் பார்க்காமல், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.


1 More update

Next Story