பொள்ளாச்சி அருகே பணம் வைத்து சூதாட்டம்; 12 பேர் கைது


பொள்ளாச்சி அருகே பணம் வைத்து சூதாட்டம்; 12 பேர் கைது
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே பணம் வைத்து சூதாட்டம்; 12 பேர் கைது

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

பொள்ளாச்சி அருகே உள்ள நல்லாம்பள்ளி பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் தோட்டத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கோமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து கோமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பணம்வைத்து சூதாடி கொண்டிருந்த நல்லாம்பள்ளியைச் சேர்ந்த தங்கவேல், மருதமுத்து, வேலுச்சாமி, தண்டபாணி, அசோக் குமார், காலீஸ்வரன் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து சூதாட்ட பணம் ரூ.29 ஆயிரத்து 420-ஐ பறிமுதல் செய்தனர். இதேபோல் கொள்ளுப்பாளையம் புது காலனி பகுதியில் பணம் வைத்து சூதாட்டியதாக அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், ராமச்சந்திரன், கார்த்திக், ஈஸ்வரன், கிருஷ்ணன், பொள்ளாச்சி டி. கோட்டாம்பட்டி, அண்ணா நகரைச் சேர்ந்த சந்தோஷ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1400 பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story