கீழையூரில் சதுர்த்தி விழா:கந்தர்வ வாகனத்தில் யானை கணபதி வீதிஉலாதிரளான பக்தர்கள் தரிசனம்


கீழையூரில் சதுர்த்தி விழா:கந்தர்வ வாகனத்தில் யானை கணபதி வீதிஉலாதிரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 12 Sept 2023 12:15 AM IST (Updated: 12 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கீழையூரில் சதுர்த்தி விழாவில் கந்தர்வ வாகனத்தில் யானை கணபதி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனா்.

கள்ளக்குறிச்சி


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கீழையூரில் பிரசித்தி பெற்ற சிவானந்தவல்லி உடனுறை வீரட்டானேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தையொட்டி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பெரிய யானை கணபதி கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 9-ந்தேதி வெகு விமரிசையாக தொடங்கியது. தினசரி யானை கணபதிக்கு அபிஷேக ஆராதனை நடந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. இதில் நேற்று உற்சவர் யானை கணபதி கந்தர்வ வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) நாக வாகனத்திலும், நாளை(புதன்கிழமை) மூஷிக வாகனத்திலும், நாளை மறுநாள்(வியாழக்கிழமை) யானை வாகனம், , 15-ந்தேதி மயில் வாகனமும், 16-ந்தேதி குதிரை வாகனத்திலும், 17-ந்தேதி குதிரை வாகனத்திலும், 18-ந்தேதி காமதேனு வாகனத்திலும், 18-ந்தேதி மூஷிக வாகனத்திலும் யானை கணபதி எழுந்தருளி வீதி உலா வர இருக்கிறார்.

விழாவை முன்னிட்டு கோவிலில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர்கள், உபயதாரர்கள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் முன் நின்று செய்து வருகின்றனர்.


Next Story