கந்த சஷ்டி விழா: திருச்செந்தூர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வுசெய்தார்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா 25-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி பக்தர்கள் தங்கி இருந்து விரதம் மேற்கொள்ள தற்காலிக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அதனை இன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் அன்புமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story