முருகன்கோவிலில் கந்தசஷ்டி விழா


முருகன்கோவிலில் கந்தசஷ்டி விழா
x

முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழா நடைபெற்றது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட வாலசுப்பிரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு கந்த சஷ்டி சத்ரு சம்ஹார ஹோமம் நடைபெற்றது. முன்னதாக வால சுப்பிரமணியருக்கு பால், தேன், பன்னீர், மஞ்சள் உள்பட பல்வேறு வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், கோவில் ட்ரஸ்டி ராஜரத்தினம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story