செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா


செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா
x

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் மலைக்குன்றின்மீது அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு ஏகாதச ருத்ரஜெபமும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு கந்தசஷ்டி விழா விமரிசையாக நடக்கிறது. தண்டாயுதபாணி உற்சவர் சிலைக்கு பழங்கள், பால், இளநீர், பன்னீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களைக்கொண்டு அபிஷேகங்களும், மகாதீபாராதனையும் நடக்கிறது. 31-ந் தேதி காலை 9 மணிக்கு செட்டிகுளம் கடைவீதி அருகே அமைந்துள்ள ஏகாம்பரேசுவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


Next Story