காந்தி கலை அறிவியல் கல்லூரியில்சுற்றுச்சூழல் குறித்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி
காந்தி கலை அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளியில் உள்ள காந்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் குறித்த சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் தீனதயாளன் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறை உதவி பேராசிரியர் ஆர்.கேசவன் வரவேற்று பேசினார். கல்லூரியின் செயலாளர் ஜி.எஸ்.சிராஜுதீன், இயக்குனர் ஏ.சி.கார்த்தி அரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பவானிசாகர் வனச்சரகர் பி.பழனிச்சாமி, வனக்காப்பாளர் ஆறுச்சாமி கலந்துகொண்டு சுற்றுப்புறசூழல் பற்றி விளக்கி பேசினார்கள். முடிவில் கல்லூரியின் துறை தலைவர் ஜெயகீர்த்தி நன்றி கூறினாா்
Related Tags :
Next Story