காந்தி பூங்கா முற்றுகை


காந்தி பூங்கா முற்றுகை
x

காந்தி பூங்காயை முற்றுகையில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் அண்ணாசிலை அருகே நகராட்சி காந்தி பூங்கா உள்ளது. இந்த பூங்காவை நிா்வகிப்பது தனியார் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் உணவு திண்பண்ட கடைகளும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காந்திபூங்காவில் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு காந்தி பேரவை மூலம் நிர்வகிக்க அனுமதிக்க வேண்டும் என அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவையினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காந்தி பூங்காவை மீட்க கோரி அந்த அமைப்பை சேர்ந்தவர்கள், நிறுவனர் தினகரன் தலைமையில் திரண்டு பூங்காவை முற்றுகையிட்டனர். மேலும் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story