சங்கரபதி பக்கீர் முஹம்மது தர்காவில் கந்தூரி விழா


சங்கரபதி பக்கீர் முஹம்மது தர்காவில் கந்தூரி விழா
x
தினத்தந்தி 22 Jan 2023 12:15 AM IST (Updated: 22 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேவகோட்டை அருகே உள்ள சங்கரபதி பக்கீர் முஹம்மது ஒளியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா நடை பெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை,

தேவகோட்டை அருகே உள்ள சங்கரபதி பக்கீர் முஹம்மது ஒளியுல்லாஹ் தர்காவில்தேவகோட்டை ஜமாத் சார்பில் கந்தூரி விழா தலைவர் கமருல் ஜமான் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, தி.மு.க. நகர செயலாளர் பெரி.பாலா, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் அப்பாச்சி சபாபதி, வக்கீல் சஞ்சய், இளங்குடி முத்துக்குமார், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஜாகிர் உசேன், ஓ.பன்னீா்செல்வம் அணி தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மீரா உசேன், தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் மதார் சேட், மற்றும் ஜமாத்தினர் திரளாேனார் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story