சின்னமனூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


சின்னமனூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

சின்னமனூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

தேனி

சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இந்தநிலையில் வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் சின்னமனூர் சீப்பாலக்கோட்டை சாலையில் உள்ள முத்தாலம்மன் கோவில் திடலுக்கு கொண்டுவரப்பட்டன.

இந்தநிலையில் நேற்றிரவு விநாயகர் சிலைகள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மேளதாளங்கள் முழங்க முத்தாலம்மன் கோவில் திடலில் ஊர்வலம் தொடங்கப்பட்டது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள், மார்க்கையன்கோட்டை முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டன.

இந்த ஊர்வலத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story