விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டம்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமை தாங்கி பேசும்போது, விநாயகர் சிலை வைக்கும் இடம் தனியாருக்கு சொந்தமானதாக இருந்தால் அதன் உரிமையாளரிடமும், பொது இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும் ஆட்சேபமின்மை சான்று பெற வேண்டும். மேலும் சப்-கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். தீ விபத்து ஏற்படுவதை தடுக்க ஒரு கண்காணிப்பாளரை நியமிக்க வேண்டும். மேலும் 2 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். 3 நாட்கள் மட்டுமே சிலையை வைத்திருக்க அனுமதி உண்டு என்றார். பின்னர் அனைவருக்கும் விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இதில் இந்து அமைப்பினர் மற்றும் பா.ஜனதாவினர் கலந்துகொண்டனர்.