விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2023 7:00 PM GMT (Updated: 18 Sep 2023 7:01 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. நகர இந்து முன்னணி சார்பில் வ.உ.சி. திடலில் 7 அடி உயரம் கொண்ட கல்வி விநாயகர் சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

அதேபோல், திருச்செந்துர் பகுதியில் சுப்பிரமணியபுரம், ஜீவாநகர், சண்முகபுரம், முத்துநகர், முத்துமாலையம்மன் கோவில் தெரு, அண்ணா காலனி கோவில் தெரு உள்ளிட்ட 8 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு, இந்து முன்னணி நகரத்தலைவர் முத்துராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலர்கள் ராஜேந்திரன், ராஜூ, நகர செயலாளர் வேல்முருகன், நகர பொருளாளர் பட்டு இசக்கி, பொறுப்பாளர்கள் வாசு, தீபக், பிரசாத் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவில்கள்

மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருச்செந்தூர் நகர் பகுதியில் உள்ள தூண்டுகை விநாயகர் கோவில், சித்தி விநாயகர், ெரயிலடி ஆனந்தவிநாயகர், ஆதிவிநாயகர், ஜீவாநகர் அதிர்ஷ்ட விநாயகர், சபாபதி விநாயகர் கோவில், அதிர்ஷ்ட விநாயகர், ஜெய விநாயகர், வெற்றி விநாயகர், அமிர்தகுண விநாயகர், குபேர விநாயகர், மகிமை விநாயகர் உள்ளிட்ட உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தது.

இந்து மக்கள் கட்சி

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் காயாமொழி முப்புராதி அம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே சனாதனா கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், மாநில பொது செயலாளர் ரவிகிருஷ்ணன், தெற்கு மாவட்ட தலைவர் இசக்கிமுத்து, அனுமன் சேனா தெற்கு மாவட்ட தலைவர் தங்கராஜ், இந்து மக்கள் கட்சி மாவட்ட வக்கீல் அணி தலைவர் கங்கை அமரன், மாவட்ட பொது செயலாளர் தங்கராஜ், இளைஞரணி தலைவர் கண்ணன், வன சேகர், திருச்செந்தூர் ஒன்றிய தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கழுகுமலை-ஓட்டப்பிடாரம்

கழுகுமலையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடந்தது. இதில் கழுகுமலை நகர ஒருங்கிணைப்பாளர் அழகுசுப்பிரமணியன், துணை தலைவர் பொன்னுச்சாமி, பொறுப்பாளர்கள் சின்னத்தம்பி, பிரகாஷ் மற்றும் தொழிலதிபர் தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள முறம்பன் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பொன்ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் மாரிமுத்து, மாநில பொது செயலாளர் ரவிகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி நேருகாலனி சுடர்ஒளி விநாயகர் கோவிலில் நேற்று காலையில் மகா கணபதி ஹோமம், அபிேஷகம், அலங்காரம், தீபாராதனைகள், திருவிளக்கு பூைஜகள் நடந்தன. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோவில் தர்மகர்த்தா நாராயணமூர்த்தி, துணை தர்மகர்த்தா முருகன், செயலாளர் மாரியப்பன், துணை செயலாளர் ராம்குமார், பொருளாளர் இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி நகர இந்து முன்னணி சார்பில் செந்தில் விநாயகர் கோவிலில் 11 அடி உயர விநாயகர் சிலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆறுமுகநேரி ெரயில் நிலையத்தில் உள்ள வெள்ளி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை, தெப்பக்குளத்தில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜை, சப்பரபவனி நடந்தது.

ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத்தியப்பட்ட லட்சுமி விநாயகர் கோவில், ஆறுமுக விநாயகர் கோவில், சாகுபுரம் காலனி மங்கள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.


Next Story