விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
x

கே.வி.குப்பத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவின்போது, வழிபாட்டிற்காக பிள்ளையார் வைக்கும்போது, பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்து விநாயகர் சிலை வியாபாரிகள், விழாக்குழுவினர், பொதுமக்கள் கலந்துகொண்டு ஆலோசனை செய்தனர்.

அப்போது ரசாயன பூச்சு இல்லாத களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், 10 அடிக்கு மிகாமல் இருக்கவேண்டும். மின்சார விபத்து ஏற்படாத வகையில் பந்தல் இருக்கவேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். 3-ம் நாளில் குறித்த இடத்தில் அமைதியாக சிலைகளைக் கொண்டு போய் கரைக்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் குறித்து முடிவு எடுக்கப்பட்டது.


Next Story