விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

மேல்பாடி போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
வேலூர்
மேல்பாடி
காட்பாடி தாலுகா மேல்பாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து மேல்பாடி போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
சப்-இன்ஸ்பெக்டர்கள் தர்மன், ஞானபிரகாசம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும், இரவு 10 மணிக்கு மேல் ஒலி பெருக்கி பயன்படுத்தக் கூடாது,
பட்டாசு வெடிக்கக் கூடாது. ஒவ்வொரு கிராமத்திலும் விழாவினை இளைஞர்கள் முன்னின்று அமைதியாக நடத்த வேண்டும்.
கிராம நாட்டாமைதாரர்கள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் தங்கள் கிராமங்களில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு விழாவினை நல்ல முறையில் நடத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
Related Tags :
Next Story






