விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் போலீஸ் நிலையங்களில் நடந்தது. அப்போது அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது.

ராணிப்பேட்டை

ஆலோசனை கூட்டம்

காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனைகூட்டம் நேற்று நடைபெற்றது. சப்- இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் களிமண்ணால் செய்யப்பட்ட, ரசாயனம் பூசாத சிலைகளை பயன்படுத்தவேண்டும். போலீஸ் அனுமதி பெற்று ஒலி பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதேபோல் நெமிலி போலீஸ் நிலையத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாணாவரம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் லோகேஷ், சிரஞ்சீவிலு ஆகியோர் பொதுமக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கி கூறினர்.

அரசு வழிகாட்டு நெறிமுறைகள்

அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் பாரதி தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் ரகு முன்னிலை வகித்தார். அரசு வழிகாட்டு நெறிமுறைகள் படி விநாயகர் சிலைகள் 9 அடி உயரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்சினை வராமல் விழாவை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை இன்ஸ்பெக்டர் வழங்கினார்.

இதில் இந்து முன்னணியின் ராணிபேட்டை மாவட்ட செயலாளர் குமார், நகர செயலாளர் லோகநாதன், அரக்கோணம் ஒன்றிய செயலாளர்கள் பாண்டியன், சூரியன் மற்றும் விழாக் குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story