விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்


விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
x

அரக்கோணம் போலீஸ் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

அரக்கோணம் பகுதியில் வருகிற 31-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அரக்கோணம் டவுன் இன்ஸ்பெக்டர் முனி சேகர் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் முத்து ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பேசிய இன்ஸ்பெக்டர் முனிசேகர் விநாயகர் சிலைகள் குறிப்பிட்ட நாளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் விழா கொண்டாட வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

இதில் இந்து முன்னணி ராணிபேட்டை மாவட்ட செயலாளர் குமார், நகர செயலாளர் சுதாகர், அரக்கோணம் ஒன்றிய தலைவர் பிரபா, மற்றும் பா.ஜ.க.வினர் கலந்துகொண்டனர்.


Next Story