விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கொண்டாட வேண்டும்: கலெக்டர் வேண்டுகோள்


விநாயகர் சதுர்த்தி விழாவை  சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கொண்டாட வேண்டும்:  கலெக்டர் வேண்டுகோள்
x

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கொண்டாட வேண்டும் என தேனி கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி(புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி, மாவட்ட நிர்வாகத்தால் குறிப்பிடப்படும் இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். களிமண் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் தயாரித்த சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கக்கூடாது. சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் ரசாயன சாயம் போன்றவை பயன்படுத்தக்கூடாது. கலப்படமற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story