14 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை


14 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
x

14 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடெங்கிலும் விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் திருச்சிற்றம்பலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட 14 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கு போலீஸ்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி ஆவணம், செருவாவிடுதி, திருச்சிற்றம்பலம் பீரங்கி மேடு, கடைவீதி, அண்ணா நகர், திருச்சிற்றம்பலம் புது தெரு, பாரதி நகர், மடத்திக்காடு, உப்பு விடுதி, நரியங்காடு, புனல்வாசல் (2 இடங்கள்) ஒட்டங்காடு, களத்தூர் ஆகியவை ஆகும். விநாயகர் சதுர்த்தி விழாவை அனைத்து தரப்பினரும் சிறப்பாக கொண்டாடுவதற்கு அந்தந்த பகுதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுமக்களுக்கும், போலீஸ்துறைக்கும் உரிய ஒத்துழைப்பு அளித்து விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு தருமாறு திருச்சிற்றம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயா மற்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story