விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு
கிணத்துக்கடவு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டன.
விநாயகர் சிலை
தமிழகம் முழுவதும் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையொட்டி கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கிணத்துக்கடவு, கிருஷ்ணசாமிபுரம், கல்லாங்காட்டுபுதூர், பகவதி பாளையம், தாமரைக்குளம், கோவில்பாளையம், கோடங்கிபாளையம், சிங்கையன்புதூர், சொக்கனூர், கொண்டம்பட்டி, அரசம்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இந்து முன்னணி 33 சார்பில் சிலைகளும், பொதுமக்கள் சார்பில் 10 சிலைகளும் மொத்தம் 43 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அதனைத்தொடா்ந்து விநாயகர் சிலைக்கு சிறைப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட 10 சிலைகள் அந்்தந்த பகுதியில் கரைக்கப்பட்டன.
ஊர்வலம்
இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட 32 சிலைகள் நேற்று காலை கிணத்துக்கடவு பஸ் நிலையம் எதிரே உள்ள கரிய காளியம்மன் கோவில் பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் தொடங்கியது.
இந்த ஊர்வலம் கோவை-பொள்ளாச்சி சாலை, தேரோடும் வீதி, பொன்மலை வேலாயுத சாமி கோவிலை சுற்றி வந்து மீண்டும் கிணத்துக்கடவு பஸ் நிலையத்தை அடைந்தது. இந்த விசர்ஜன ஊர்வலத்தின் போது இந்து முன்னணியினர் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாகமாக சென்றனர்.
பின்னர் விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் ஆழியாற்றிற்கு கொண்டு செல்லப்பட்ட கரைக்கப்பட்டது. இதையொட்டி கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள மற்றொரு சிலை இன்று (வியாழக்கிழமை) கரைக்கப்படுகிறது.
இதேபோல ஆனைமலை, பொள்ளாச்சி பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அம்பராம்பாளையம் ஆழியாற்றில் கரைக்கப்பட்டது.