விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

அரக்கோணத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகரின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் அனைத்து விநாயகர் சிலைகளும் சிறப்பு பூஜைக்கு பின்னர் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்ட செயலர் குமார் தலைமை வகித்தார். நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பாண்டியன், சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட சென்னை மாவட்ட தலைவர் பழனிவேல் சிறப்புரை ஆற்றினார். ஊர்வலத்தை முன்னாள் அரசு வழக்கறிஞர் எஸ். தியாகராஜன் தொடங்கி வைத்தார்.

அரக்கோணம் எஸ்.ஆர்.கேட்டிலிருந்து தொடங்கிய ஊர்வலம் பழனி பேட்டை, பஜார், பழைய பஸ் நிலையம், சுவால்பேட்டை, திருத்தணி ரோடு, அவுசிங் போர்டு வழியாக அண்ணா நகர் சென்றடைந்தது. அங்கு சிலைகள் கரைக்கப்பட்டன. இதனையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குமார், டவுன் இன்ஸ்பெக்டர் பாரதி ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


Next Story