விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிராம்பட்டினத்தில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இந்த சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

தஞ்சாவூர்

அதிராம்பட்டினம்

600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிராம்பட்டினத்தில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. இந்த சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நகர இந்து முன்னணி சார்பில் 34 -ம் ஆண்டுவிநாயகர் சிலை ஊர்வலம் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. ஊர்வலத்தையொட்டி நேற்று முன்தினம் முதல் அதிராம்பட்டினம் நகர் பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.பின்னர் பட்டுக்கோட்டையிலிருந்து புறப்பட்ட விஸ்வரூப விநாயகர் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுடன் நேற்று முதல்சேரி, பள்ளிகொண்டான், சேன்டாகோட்டை, தொக்காலிக்காடு, மாளியக்காடு, நடுவிக்காடு சென்று அங்கிருந்து புதுக்கோட்டை உள்ளூர் வழியாக பழஞ்சூர் சென்று அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையை அடைந்தது.

சிலைகள் கரைப்பு

இதைத்தொடர்ந்து அதிராம்பட்டினம் செல்லியம்மன் கோவில் மற்றும் அதிராம்பட்டினத்தைச்சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஆக மொத்தம் 38 சிலைகள் வண்டிப்பேட்டைக்கு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதிராம்பட்டினம் இந்து முன்னணி நகரத் தலைவர் நாக அருணாச்சலம் நகரத் துணைத் தலைவர் ஹரிஹரன் பாலு ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்து முன்னணியின் மாநில இணை அமைப்பாளர் பொன்னையா ஊர்வலத்தை துவக்கிவைத்தார். இதைத்தொடர்ந்து வண்டிப்பேட்டையிலிருந்து தொடங்கிய ஊர்வலம் சேர்மன்வாடி சுப்பிரமணியர் கோவில் தெரு, பஸ் நிலையம், கிழக்குச் கடற்கரைச்சாலை வழியாக ஏரிப்புறக்கரை சென்று அங்கு கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது.

பாதுகாப்பு பணி

ஊர்வலத்ைதயொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ் ராவத் தலைமையில் 8 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ஊர்வலம் செல்லும் பகுதிகளில் டிரோன் கேமரா பறக்கவிடப்பட்டு ஆங்காங்கே போலீசார் கண்காணித்து வந்தனர். நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வஜ்ரா வாகனம், தீயணைப்பு வாகனம் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.


Next Story