விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி பச்சையாபுரம், சத்திரப்பட்டி, வனமூர்த்திலிங்கபுரம், விஜயகரிசல்குளம், மீனாட்சிபுரம், சல்வார்பட்டி, கொட்டமடக்கிபட்டி, வெற்றிலையூரணி உள்ளிட்ட பகுதியில் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அருகில் உள்ள ஊருணிகளில் கரைக்கப்பட்டன. வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏழாயிரம்பண்ணையில் பழைய ஏழாயிரம் பண்ணை, சோலைபட்டி, பாண்டியாபுரம், ஆர். மடத்துப்பட்டி உள்ளிட்ட பகுதியில் இருந்து சிலைகள் ஏழாயிரம் பண்ணை பகுதியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன. தூங்கா ரெட்டிபட்டி கோவில் செல்லையாபுரம், சிப்பிபாறை, சங்கரபாண்டியாபுரம், பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அருகில் உள்ள ஊருணியில் கரைக்கப்பட்டன. ஏழாயிரம் பண்ணை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராஹிம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் ஊருணிகளில் சிலைகளை கரைத்தனர்.


Next Story