விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

சங்கராபுரத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

சங்கராபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கடைவீதி, சக்தி விநாயகர் கோவில், திரவுபதி அம்மன் கோவில், மீனவர் தெரு, வடக்கு தெரு, பங்களா தெரு, ஆற்றுப்பாதை தெரு, முதல்பாலமேடு, ஏகாம்பரேஸ்வரர் கோவில், பொய்க்குணம் சாலை, பூட்டை சாலை முருகன் கோவில், ஏரிக்கரை ஆகிய இடங்களில் 3 அடி முதல் 10 அடி உயரம் வரையிலான 10 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழா முடிந்து 7-வது நாளான நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்ட 10 விநாயகர் சிலைகளும் அங்குள்ள ஏரிகளில் கரைப்பதற்காக வாகனங்கள் மூலம் கடைவீதிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அங்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மேள, தாளம் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலமாக ஏரிக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறால் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story