விநாயகர் சிலைகள் ஊர்வலம்


விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

வெம்பக்கோட்டை பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியம் சோலைபட்டி, பாண்டியாபுரம், ஏழாயிரம்பண்ணை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இந்தநிலையில் நேற்று விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக வந்தன. சிவசங்குபட்டி செல்லும் சாலையில் உள்ள செட்டித்தெப்பத்தில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாபு ஆகியோர் முன்னிலையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அதேபோல தாயில்பட்டியில் வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் முன்னிலையில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலை அருகில் உள்ள கிணற்றில் கரைக்கப்பட்டது.


1 More update

Next Story