சிவகங்கையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


சிவகங்கையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x
தினத்தந்தி 24 Sept 2023 12:15 AM IST (Updated: 24 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது

சிவகங்கை

சிவகங்கை

விநாயகர் சதுர்த்தியையொட்டி சிவகங்கை நகர் பா.ஜ.க. சார்பில் சிவகங்கை சிவன் கோவில், வாரச்சந்தை வீதி, காளவாசல், ரெயில் நிலையம், திருப்பத்தூர் ரோடு, தொண்டி ரோடு, ஆவரங்காடு, உழவர் சந்தை, பஸ் நிலைய பகுதி உள்ளிட்ட 9 இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தனர்.

இந்த சிலைகளை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்று குளத்தில் கரைத்தனர். முன்னதாக சிவகங்கை நகரில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் சிவகங்கை சிவன் கோவில் முன்பாக கொண்டுவரப்பட்டன. அங்கிருந்து அனைத்து சிலைகளும் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் குணசேகரன், பா.ஜ.க. மாவட்ட தலைவர் சக்தி ஆகியோர் தலைமை தாங்கினா். முன்னதாக ஊர்வலத்தை பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

பா.ஜ.க. நகர்தலைவர் உதயா, பொது செயலாளர்கள் சதீஷ், பாலா, ஓ.பி.சி. அணி மாநில நிர்வாகி நாகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று சிவகங்கை தெப்பக்குளத்தை அடைந்தது. அங்கு அனைத்து விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பேரில் சிவகங்கை போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சவுந்தர்யன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருந்தது.


Next Story