பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

குடியாத்தத்தில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. நெல்லூர்பேட்டை ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டன.

வேலூர்

விநாயகர் சிலை ஊர்வலம்

வியாகர் சதுர்த்தியையொட்டி குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகள் பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வந்தது. சில இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மறுநாளே கரைக்கப்பட்டது. பெரும்பாலான விநாயகர் சிலைகள் நேற்று கரைக்கப்பட்டது.

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நேற்று மாலையில் குடியாத்தம் படவேட்டு எல்லையம்மன் கோவிலின் அருகில் இருந்து ஏராளமான விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.யுவசங்கர் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.கார்த்தி வரவேற்றார். வேலூர் கோட்ட தலைவர் கோ.மகேஷ் சிறப்புரை ஆற்றினார். கோபாலபுரம் ஊர்நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத் ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஏரியில் கரைப்பு

வழக்கறிஞர் கே.ரஜினி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்து இளைஞர் முன்னணி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் எஸ்.அனீஸ் நன்றி கூறினார்.

நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளங்களுடன், இளைஞர்கள் வீரவிளையாட்டுகள் விளையாடிபடி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

காங்கிரஸ் ஹவுஸ் ரோடு, அண்ணாசாலை, பழைய பஸ்நிலையம், காமராஜர் பாலம், தாழையாத்தம் பஜார், சந்தப்பேட்டை பஜார், நேதாஜி சவுக், ேரணாம்பட்டுரோடு, காந்தி சவுக் வழியாக சென்று நெல்லூர்பேட்டை ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டது.

பாதுகாப்பு

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராமமூர்த்தி, நந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, பாலசுப்பிரமணியம், முத்துக்குமார், சியாமளா உள்பட 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் தலைமையில், தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் ஊர்வலத்துடன் சென்றனர்.


Next Story