திருச்சிக்கு கொண்டு செல்லப்படும் விநாயகர் சிலைகள்
வேலூர், ஆந்திராவில் இருந்து திருச்சிக்கு விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்படுகிறது.
வேலூர்
திருச்சி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் தொழிலாளர்கள் இல்லை என கூறப்படுகிறது. அதனால் காட்பாடியில் சில இடங்களிலும், அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டத்திலும், கடந்த பல ஆண்டுகளாக வடமாநில தொழிலாளர்கள் முகாமிட்டு, விநாயகர் மற்றும் கிருஷ்ணர் சிலைகள் செய்து வருகின்றனர்.
இதனால் திருச்சியில் இருந்து வந்திருந்த பக்தர்களும், வியாபாரிகளும், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு வீதிகளில் வைத்து பூஜை செய்து வழிபடவும், வியாபாரம் செய்யவும் வாங்கி லாரிகளில் கொண்டு சென்றனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று முழு அடைப்பு போராட்டம் நடந்த நிலையிலும், பக்தர்கள் லாரிகளில் விநாயகர் சிலைகளை தடையின்றி ஏற்றி சென்றனர்.
Related Tags :
Next Story