திருமுல்லைவாசல் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பு
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் விநாயகர் சிலை கரைகப்பட்டன.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டு வந்தனர். இந்த விநாயகர் சிலைகளை நேற்று பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து நீர் நிலைகளில் பாதுகாப்புடன் கரைத்து வருகின்றனர். அதன்படி நேற்று சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் விநாயகர் கோவிலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை போலீஸ் பாதுகாப்புடன் திருமுல்லைவாசல் கடற்கரைக்கு ஊர்வலமாக கலை நிகழ்ச்சிகளோடு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து திருமுல்லைவாசல் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக விநாயகர் சிலையை கடலில் கரைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான பாதுகாப்பு பணிகளில் சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.