திண்டிவனத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்


திண்டிவனத்தில்    விநாயகர் சிலைகள் ஊர்வலம்
x

திண்டிவனத்தில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.

விழுப்புரம்


இந்துக்களின் முழுமுதற் கடவுளான விநாயகரை போற்றி ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 31-ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 1,536 சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதவிர சிறிய அளவிலான விநாயகர் சிலைகளையும் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தி முடிந்து 3-வது மற்றும் 5-வது, 7-வது நாட்களில் பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்சென்று ஏரி, குளம், கடற்கரை உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

திண்டிவனம்

திண்டிவனத்தில் செஞ்சி ரோடு அங்காளம்மன் கோவில் அருகில் இருந்து 24 விநாயகர் சிலைகள் மரக்காணம் பகுதி கடலில் கரைப்பதற்கான ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்தை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டி. என். கே. பிரபு தலைமையில் புதுச்சேரி மாநில அமைச்சர்கள் நமச்சிவாயம், சரவணன்ஆகியோர் கலந்து கொண்டு, இந்து முன்னணி கொடியை அசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில், பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளர் தினேஷ், நகர செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலமானது, திண்டிவனம் நேரு வீதி, மேம்பாலம் வழியாக மரக்காணம் சென்றது. ஊர்வலத்தின் போது, உதவிபோலீஸ் சூப்பிரண்டுகள் தேவராஜ், அபிஷேக் குப்தா ஆகியோர் மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


Next Story